• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மதுரையில் காரில் இளைஞரை தரதரவென இழுத்து சென்று சாலையில் தூக்கி வீசிய கொடூர சம்பவம்

ByKalamegam Viswanathan

Apr 2, 2023

இரு சக்கர வாகனத்தை மோதிய காரை வழிமறித்த இளைஞரை பிடித்து சாலையில் தரதரவென இழுத்துக் கொண்டு காரை வேகமாக இயக்கி தூக்கி வீசிவிட்டு தப்பிச் சென்று சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை பைபாஸ் சாலையில் இருந்து எல்லீஸ் நகர் 70 அடி சாலை வழியாக அதிவேகமாக சென்ற அவ்வழியாக சென்ற இரு சக்கர வாகனத்தை மோதியதை அடுத்து இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள் காரை மறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து காரில் இருந்த நபர்கள் இளைஞரை பிடித்து சாலையில் தரதரவென இழுத்துக் கொண்டு காரை வேகமாக இயக்கி இளைஞரை சாலையில் தூக்கி வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ் எஸ் காலனி போலீசார் இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.