• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 29, 2023
  1. ”நிறை ஒழுக்கம்”-இச்சொற்றொடரின் இலக்கணம்?
    வினைத் தொகை
  2. ”பாடாக் குயில்”-இச்சொல் காட்டும் இலக்கணம்?
    ஈறுக்கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  3. ”நீராருங் கடலுடுத்த” என்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்?
    “மனோன்மணீயம்” பெ.சுந்தரனார்
  4. ”ஜன கண மண” எனும் தேசிய கீதம் பாடியவர்?
    இரவீந்தரநாத் தாகூர்
  5. “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடலை இயற்றியவர்?
    மகாகவி பாரதியார்
  6. திருவருட்பாவை இயற்றியவர்?
    இராமலிங்க அடிகளார்
  7. ”திருவருட்பிரகாச வள்ளலார்” என்னும் சிறப்பு பெயர் பெற்றவர்?
    இராமலிங்க அடிகளார்
  8. இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர்?
    கடலூர் மாவட்டம் மருதூர்
  9. இராமலிங்க அடிகளாரின் பெற்றோர்?
    இராமையா-சின்னம்மையார்
  10. இராமலிங்க அடிகளார் எழுதிய நூல்கள் எவை?
    ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்