• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வேடச்சந்தூர் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை..!

Byவிஷா

Mar 27, 2023

திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணியை, வேடச்சந்தூர் எம்.எல்.ஏ காந்திராஜன் தொடங்கி வைத்தார்.
வேடசந்தூர் அருகே ஸ்ரீராமபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மாரம்பாடி சாலையில் மாத்தினிபட்டி பிரிவு என்னுமிடத்தில் ரூ. 8½ லட்சம் செலவில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை, வேடசந்தூர் எம். எல். ஏ. காந்திராஜன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன், மாவட்ட கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வி ராமச்சந்திரன், தாமரைச்செல்வி முருகன், வேடசந்தூர் பேரூராட்சி தலைவர் மேகலா கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், வேடசந்தூர் நகர செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பிரியம் நடராஜன், ஒன்றிய பிரதிநிதி பெருமாள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், தி. மு. க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.