• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை வீரவசந்தராயர் மண்டபத்தின் புணரமைப்பு பணிகள் துவக்கம்

Byp Kumar

Mar 27, 2023

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் இருக்கும் வீரவசந்தராயர் மண்டபம் புணரமைப்பு பணியான தூண்கள் அமைக்கும் பணியின் பூமி பூஜை நடைபெற்றது
மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் இருக்கும் வீரவசந்தராயர் மண்டபம் புராதன பழமை வாய்ந்தது. இங்கு பல அரிய சிற்பங்கள் உள்ளன. இந்த மண்டபத்தில் வியாபாரிகள் பலர் கடைகள் வைத்து நடத்தி வந்தனர்.

கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி இந்த மண்டபத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலுமாக சேதமடைந்தது.இந்நிலையில் மதுரைமீனாட்சியம்மன் திருக்கோயிலில் உள்ள வீரவசந்தராயர் மண்டபத்தின் புணரமைப்பு பணியான தூண்கள் அமைக்கும் பணியின் பூமி பூஜையில் மாவட்ட ஆட்சித்தலைவர் , மாநகராட்சி மேயர் , அருள்மிகு மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன் கலந்து கொண்டனர்.