• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குந்தா அணையில் குப்பைகளை அகற்ற முன்னோட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா அணையில் தங்கி உள்ள குப்பைகள் செடி, கொடி இலை அகற்றும் பணியில் ஊழியர்களைக் கொண்டு ஈடுபடுத்த அதிகாரிகள் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் எவ்வாறு குப்பைகள் தேங்கியுள்ளது அதை எவ்வாறு அகற்றப்பட வேண்டும் என ஊழியர்களைக் கொண்டு பரிசிலில் சென்று ஆய்வு நடத்தப்பட்டது
தமிழகத்தின் உள்ள நீலகிரிமாவட்டத்தில் அமைந்துள்ள குந்தா நீர்மின்னாக்கத் திட்டம், காமராசர் அரசால் நீலகிரி மலைகளிலிருந்து வரும் குந்தா ஆற்றில் கட்டப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஐந்து மின்னாக்க நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றால் உற்பத்தியாகக் கூடிய மின்சக்தியின் மொத்த அளவு ஏறத்தாழ 500 மெகா வாட் ஆகும். ஒரு மெகாவாட் என்பது 10 இலட்சம் யூனிட்டுகளை கொண்டதாகும் மழை காலங்களில் அடித்து வரப்படும் குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றை அணையில் தேங்கி விடுகிறது இதனால் மின் உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்படுவதால் குப்பைகளை அகற்றுவதற்கான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்