• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

மதுரை மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழா

ByKalamegam Viswanathan

Mar 23, 2023

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழா மற்றும் சிஎஸ்ஐ பள்ளியின் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.
தென்னிந்திய திருச்சபை மதுரை ராமநாதபுரம் திருமண்டிலம் சோழவந்தான் குருசேகரம் மேலக்கால் சி எஸ் ஐ சான்றலர் ஆலயம் நூற்றாண்டு விழா மற்றும் சிஎஸ்ஐ ஆரம்பப்பள்ளியின்புதிய பள்ளி கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.

ஜெய சுரேஷ் ஜெயராஜ் குடும்பத்தினர் கட்டிக் கொடுக்கப்பட்ட பள்ளி கட்டிடம் மங்கல படைப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு மதுரை இராமநாதபுரம் பேராயர் டாக்டர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் தலைமையேற்று மங்கள படைப்பு செய்தார் .பேராயர் அம்மா திருமதி மேரி ஜெயசிங் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். திருமண்டில முதன்மை பணியாளர்கள் குரு வானவர்கள் சோழவந்தான் குருசேகர பிசி சேர்மன் மற்றும் தாளாளர் எபினேசர் துரைராஜ் குருசேகர நிர்வாகிகள்திருச்சபை மக்கள்மேலக்கால் பொதுமக்கள் மாணவர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.