• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை.?பிரச்சார பயணம்

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை என்ற கோள்வியோடு கன்னியாகுமரி,வேதாரண்யம்,ஓசூர்
சென்னை என் நாங்கு முனைகளில் இருந்து உரிமை பரப்புரை பிரச்சார பயணம் திருச்சி நோக்கிய வாகனம் பயணம் . இந்தியாவின் தென் கோடி முறையான கன்னியாகுமரியில் இருந்து முன்னாள் பெரும் குளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நா.பெரியசாமி வாழ்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் .குமரியை சேர்ந்த அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற தலைவர் மற்றும் பொருப்பாளர்கள் பங்கு பெற்றனர்.
இன்றைக்கு இந்தியாவில் இளைஞர்கள் முன் உயர்ந்து நிற்கும் மிகப் பெரிய கேள்வி குறியாக.பட்ட படிப்பின் பல்வேறு பிரிவுகளில் படித்து முடித்து ஆண்டுகள் பல கடந்து கொண்டிருக்கிறது.படித்த இந்த இளைஞர்களின் வேலை வாய்ப்பை உருவாக்காத.ஒன்றிய, மாநில அரசுகளின் செயல் பாட்டை இரண்டு அரசுகளுக்கு உணர்த்தவும்.புதிய பொருளாதாரக் கொள்கையும், முதலாளித்துவமும் இன்று நாட்டு மக்கள் முன் உள்ள வறுமை நிலைக்கு காரணம். இன்றைக்கு பணி பாதுகாப்பற்ற IT ஊழியர்கள், நிரந்தர பணியிடங்களை தனியார் ஏஜன்சிகள் இடம் தமிழக அரசு ஒப்படைத்துள்ளது. ஆசிரியர்கள் சமுகத்தில் 6000_ம் பேர்களின் சான்றிதழ் சரிபார்க்கபட்ட பின்னும் வேலைமறுப்பு.


பிரதமர் மோடி சொன்ன வாக்குறுதி இந்தியாவில் ஆண்டுக்கு 2_கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி . இந்த எட்டு ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு கூட வேலை வாய்ப்பை மோடியின் ஒன்றிய அரசு வழங்காத நிலையில் பொய்,பகட்டு வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றி விடலாம் என்ற மோடியின் பொய் வாக்குறுதிக்கு எதிராக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள்.தமிழ் நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் சுமார் 67 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர்.தேசத்தின் நலனை கருதி.மார்ச் 23_ மாவீரன் பகத்சிங் நினைவு நாளில் கன்னியாகுமரி, ஓசூர், வேதாரண்யம்,சென்னை ஆகிய நான்கு முனைகளில் இருந்து இருந்து இன்று(மார்ச்_23) தொடங்கும் வாகனப் பயணம். தோழர் பாலதண்டாயுதம் நினைவு தினமான ஏப்ரல் 2-ம் நாள் திருச்சியில் இளைஞர் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது என தெரிவித்தார்.