• Tue. May 26th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் கிராமசபை கூட்டம்

Byp Kumar

Mar 22, 2023

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் கார்சேரி,சக்கிமங்கலம், ஆண்டார்கெட்டாரம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சிலைமான் ஊராட்சியிலும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது
கிராமசபை கூட்டத்தில் தண்ணீரை பாதுகாப்பது மற்றும் தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து விதமாக பொதுமக்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது கார்சேரி ஊராட்சி மன்றத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில்ஊராட்சி மன்ற தலைவர் பாண்டீஸ்வரிஇளவரசன் தலைமையிலும் துணைத் தலைவர் விஜிராஜா கிராம ஊராட்சி செயலாளர் ராஜபிரபு மற்றும் வார்டு உறுப்பினர்கள்கலந்துகொண்டு ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை பொதுமக்கள் முன்னிலைஆண்டறிக்கையாக வெளியிட்டனர் .

அதனை தொடர்ந்துசக்கிமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமிகாசிராஜன் தலைமையில் துணைத் தலைவர் முருகேஸ்வரிஊராட்சி செயலர் மணிகண்டராஜன் மற்றும் வார்டு உறுப்பினர் அழகுமணி உட்பட அனைத்து வார்டு உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் அதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சிலைமான் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கோல்டன் சாகுல்ஹமீது தலைமையிலும் துணைத் தலைவர் ஜுனைத்பேகம் ஊராட்சி செயலர் சுரேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் அதேபோன்று ஆண்டார்கெட்டாரம் ஊராட்சி மன்றத் தலைவர் சீமான் தலைமையில் துணைத் தலைவர் ஊராட்சி செயலர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்