• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மதுரை வில்லாபுரத்தில் இடி, மின்னல் தாக்கி வீடுகள் சேதம்

ByKalamegam Viswanathan

Mar 22, 2023

வில்லாபுரம் பகுதியில் அருகருகே இரண்டு வீட்டில் இடி, மின்னல் தாக்கி வீட்டின் கான்கிரீட் மேல்கூரை இடிந்து விழுந்து சேதம்..!
மதுரை வில்லாபுரம் அகத்தியர் 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மணிமாறன் – பாண்டிமீனா தம்பதியினர் ஒரு மகன் மகளுடன் வசித்து வருகின்றனர். அவரது வீட்டின் அருகே வழிவிட்டான் மனைவி மகாலட்சுமி இரண்டு மகளுடன் வசித்து வருகின்றனர்.
நேற்று மதுரை மற்றும் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 7 மணி முதல் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பொழிந்தது.

இந்த நிலையில் மதுரை வில்லாபுரம் பகுதியில் திடீர் இடியுடன் மின்னல் தாக்கியதில் அருகருகே உள்ள இரண்டு வீட்டின் கான்கிரீட் மேல்கூரை இடிந்து வீட்டுக்குள் விழுந்தது. இந்த நிலையில் வீட்டில் இருந்த பெண்கள் , குழந்தைகள் மீது விழாமல் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.மதுரையில் திடீரென பெய்த மழையில் இடியுடன் மின்னல் தாக்கி அருகருகே இரண்டு வீட்டின் கான்கிரீட் மேல்கூரை இடிந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.