• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் கோலப்போட்டி..!

Byவிஷா

Mar 22, 2023

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் மகளிர் தினத்தை முன்னிட்டு மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது.
சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இந்த கோலப் போட்டியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பார்ப்போரை வியக்க வைக்கும் வகையில் தமிழக அரசு பெண்களுக்கு செய்யப்பட்ட திட்டங்களை எடுத்துக்காட்டும் விதமாக கோலங்கள் பெண்களால் நேர்த்தியாக போடப்பட்டிருந்தது.
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஏற்பாட்டில் கோல போட்டியில் நடுவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிலா கோலங்களை பார்த்து மதிப்பீடு செய்தார். இதில் முதல் பரிசு பிரிட்ஜ், இரண்டாம் பரிசாக கிரைண்டர், மூன்றாம் பரிசாக மிக்ஸி வழங்கப்பட்டது. மேலும், கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.