• Thu. Jun 8th, 2023

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு உதகையில் கிராமசபை கூட்டம்

உலக தண்ணீர் தினமான இன்று நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளிலும் மன்ற தலைவர் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது
இதன் ஒரு பகுதியாக உதகை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உல்லத்தி பகுதியில் மன்றத் தலைவர் சந்தோஷ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இதில் சில முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் பொது மக்களுக்கு குடிநீர் பெறுவதின் முக்கியத்துவத்தினை விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் மன்றத் தலைவர் எடுத்துரைத்தார் மேலும் இதில் வரவு செலவு கணக்குகளையும் பொதுமக்கள் முன்னிலையில் எடுத்துரைத்தனர்.மேலும் அழகர் மலையில் பல காலமாக குடி தண்ணீர் பிரச்சனை இருந்து வருகிறது அதனை உடனடியாக நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தப்படும் எனவும் மன்ற தலைவர் கூறினார்.ஏக்குன்னி மற்றும் தலைக்குந்தா பகுதியில் பேருந்து நிழல் குடை அமைத்து தர முயற்சிகள் எடுத்து வருவதாகவும் மன்ற தலைவர் எடுத்துரைத்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *