• Thu. May 2nd, 2024

பழனியில் தங்கும் விடுதிகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

ByKalamegam Viswanathan

Mar 21, 2023

பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் பக்தர்கள் பழனியில் தங்கி முருகனை தரிசனம் செய்ய வசதியாக மலையடிவாரத்தில் தேவஸ்தான தங்கும் விடுதிகள், தனியார் தங்கும் விடுதிகள் என 500 க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. இந்நிலையில் தங்கும் விடுதிகளில் பழனி கோட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது தங்கும் விடுதிகளுக்கு முறையாக நகராட்சியிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா? கழிவுநீர் வெளியேற்றுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து பார்வையிட்டனர். மேலும் பழனி வையாபுரி குளத்தில் தங்கும் விடுதிகளின் மாசுபடிந்த கழிவு நீரை வெளியேற்றினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *