• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆலயங்களின் வழிபாட்டு முறையில் இந்து அறநிலையத்துறை தலையிடக்கூடாது -ஹிந்துஸ்தான் தேசிய கட்சியின் தலைவர் பேட்டி

ByKalamegam Viswanathan

Mar 21, 2023

+2 வரை அனைவருக்கும் இலவச கல்வி என்கிற சட்டம் இயற்ற வேண்டும், ஆலயங்களின் வழிபாட்டு முறையிலும், சடங்குகளிலும் இந்து அறநிலையத்துறை தலையிடக்கூடாது – ஹிந்துஸ்தான் தேசிய கட்சியின் தேசிய செயல் தலைவர் சீனிவாசன் ராஜாஜி பேட்டி,
 மதுரையில் தனியார் அரங்கில் ஹிந்துஸ்தான் தேசிய கட்சியின் மாநில செயல்வீரர்கள் கூட்டம் கட்சியின் நிறுவனர் கே. வி கிருஷ்ணசாமி தலைமையிலும், தேசிய செயல் தலைவர் ஸ்ரீனிவாசன் இராஜாஜி அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கேரளாவைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி சுவாமிகள், ரமேஷ் சுவாமிகள், ராமநாட்டு ராசா, முருகேசன் மற்றும் விஸ்வ ஹிந்து ரக்ஷா சம்ஹிதன், மது சிவ யோகினி, தமிழ்நாடு மாநிலத் தலைவர் பத்மநாபன் மற்றும் மாநில, மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர், இக்கூட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, பின்னர் தேசிய செயல் தலைவர் ஸ்ரீனிவாசன் ராஜாஜி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்,

சந்திப்பில்
கல்விக்கூடங்களை அரசுடமையாக்கப்பட்டு ஒரே மாதிரியான பாடத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும், மாநிலம் முழுவதும் மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை  வழங்கப்பட வேண்டும், +2 வரை அனைவருக்கும் இலவச கல்வி என்கிற சட்டம் இயற்றப்பட வேண்டும்,  தனியார் பள்ளிகளில் இந்தி மொழி பாடம் கற்பிக்கப்படுகிறது ஆனால் அரசு பள்ளிகளில் ஹிந்தி மொழி தவிர்க்கப்படுகிறது,  அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் விருப்பப்பட்டோர் ஹிந்தி மொழி கற்க வசதி செய்து கொடுக்க வேண்டும், ஆலயங்களின் வழிபாட்டு முறையிலும், சடங்குகளிலும் இந்து அறநிலைத்துறை தலையிடக்கூடாது, தமிழக அரசு கோவில்களை இடிப்பதும், கோவில் நெறிமுறைகளை மாற்றுவதுமாக நடந்து கொள்வதை இந்து அறநிலைத்துறை கைவிட வேண்டும், இந்து ஆலயங்களை இந்து மதத்திைனரிடமே ஒப்படைக்க வேண்டும், ஆலயங்களை கைப்பற்றுவது சம்பந்தமாக இந்து மடாதிபதிகள் மற்றும் ஆன்மீக தலைவர்களை கலந்த அலோசிக்க வேண்டும்,  எந்த ஒரு மதத்தையும் இழிவாக பேசுவதோ, எழுதுவதோ குற்றமாக கருதப்படும் என்ற சட்டம் இருந்தும், திராவிட இயக்கங்களும் அதன் கூட்டணியிரைும் இந்து மதத்தை கேவலப்படுத்துவதையே தொழிலாகக் கொண்டுள்ளனர், அதை கைவிட வேண்டும், பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு 10%  இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும், இவர் பேசினார்..