• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தமிழக பட்ஜெட் 2023- 2024- முக்கிய அறிவிப்புகள்

ByA.Tamilselvan

Mar 20, 2023

தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தமிழக அரசின் பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகள்:-
1.தஞ்சாவூர் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்
2.வரும் நிதி ஆண்டிலிருந்து அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் செயல்படுத்தப்படும்
3.உயிர் தியாகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த படை வீரர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை இருமடங்காக உயர்வு!நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும்போது உயிர்த்தியாகம் செய்யும் தமிழ்நாட்டைச் சேர்ந்த படைவீரர்கள் குடும்பத்திற்கான கருணைத்தொகை ரூ. 40 லட்சமாக உயர்வு”
4.இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும்”
5.”கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை” – தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு
6.மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் 1500 ஆக அதிகரிப்பு
கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை 2000 ஆக அதிகரிப்பு
7.முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு 500 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாட்டின் 18 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள்
8.”4ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.110 கோடி செலவில் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்படும்”
9.பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 40,299 கோடி ஒதுக்கீடு”
10.சென்னை ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்த 25 கோடி ஒதுக்கீடு
11.ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு 4 புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் கட்டப்படும்; இதன் பராமரிப்பு பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களிடம் அமைக்கப்படும்
12.சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாட்டு மையம் CMDA மூலம் சென்னையில் அமைக்கப்படும்
13.கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சிப்காட் வளாகத்தில் ₹80 கோடி மதிப்பில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்
14.இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்துறந்த தாளமுத்து – நடராஜனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்
15.பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வரும் நிதியாண்டிலும் .200 கோடி செலவில் பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகள் மேம்படுத்தப்படும்
16.மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவு நூலகம் வரும் ஜூன் மாதம் திறப்பு!
17.ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் நாடுமுழுவதும் ஆயிரம் கேலோ இந்தியா விளையாட்டு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்
18.”பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரிக்கு உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ. 40 கோடி நிதி
19.தமிழ்நாடுபட்ஜெட்2023 | 54 அரசு ஐ.டி.ஐ.க்கள் திறன்மிகு தொழிற்பயிற்சி மையங்களாக மாற்றப்படும்
20.சென்னையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மையம் அமைக்கப்படும்
21.”அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளை தமிழில் மொழி பெயர்த்திட ரூ. 5 கோடி நிதி”
22.2 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது ரூ1,500 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு.மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ18,661 கோடி நிதி ஒதுக்கீடு
23.கோவையில் செம்மொழிப்பூங்கா 2 கட்டங்களாக அமைக்கப்படும்
24.சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் 1000 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்!
25.மரக்காணத்தில் ரூ.25 கோடி செலவில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும்”
26.ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் வனப்பகுதியில் 80,000 ஹெக்டேரில் இது அமைக்கப்பட உள்ளது. இது தமிழ்நாட்டின் 18வது வனவிலங்கு சரணாலயமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
27.மீன்பிடி தடைக்காலத்தில், மீனவர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6,000 ஆயிரம் வழங்க ரூ. 389 கோடி நிதி ஒதுக்கீடு
28.கடல் அரிப்பை தடுக்க, கடல் மாசுபாட்டை குறைக்க ₹2000 கோடி மதிப்பீட்டில் ‘தமிழ்நாடு நெய்தல் மீட்சித்திட்டம்’ உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும்
28.புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ₹1000 வழங்குவதால் உயர்கல்வியில் முதலாமாண்டு சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 29% அதிகரிப்பு
29.பெண் தொழில் முனைவோர், புதிய தொழில்களை தொடங்க உதவும் வகையில் இயக்கம் ஒன்று அமைக்கப்படும்
30.பொதுவிநியோகத்திட்டத்தில் உணவு மானியத்திற்காக 10,500 கோடி ஒதுக்கீடு மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க 320 கோடி ஒதுக்கீடு
30.மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ₹30,000 கோடி அளவில் வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம்
31.தமிழ்நாட்டில் கிராம பகுதிகளில் 10,000 குளங்கள், ஊரணிகள் ரூ.800 கோடியில் புதுப்பிக்கப்படும்.ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் 2ம் கட்ட பணிகள் ரூ.7145 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்
32.மறுவாழ்வு முகாம்களில் இருக்கும் இலங்கை அகதிகளுக்கு புதிய வீடுகள் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக நிதியமைச்சர் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்
33.இலங்கை அகதிகளுக்கு 7,469 புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக 3,510 வீடுகள் ரூ.176 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றன. மீதமுள்ள வீடுகளை கட்ட வரும் நிதியாண்டில் ரூ.223 கோடி வழங்கப்படும் என்று கூறினார்
34.சென்னையில் கழிவறைகள் கட்டவும், மேம்படுத்தவும் ரூ.430 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை வெள்ளத்தடுப்பு பணிக்கு ரூ.320 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை தீவுத்திடலில் திறந்தவெளி தியேட்டர் அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடையாறு, கூவம் சீரமைப்புக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
35.விவசாய கடன் தள்ளுபடி ரூ.2391 கோடி, நகைக் கடன் தள்ளுபடி ரூ.1000 கோடி, சுயஉதவி குழு கடன் தள்ளுபடி ரூ.600 கோடி என மொத்தம் ரூ.3993 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
36.மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30,000 கோடி ஒதுக்கீடு
37.சிறுபான்மை சமூக மாணவர்களுக்கு நலத் திட்டங்களுக்கு ரூ.1580 கோடி நிதி ஒதுக்கீடு
38.மொழிப்போர் தியாகி தாளமுத்து நடராஜருக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்
39.தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்
40.சங்கமம் கலைவிழா, மேலும் 8 முக்கிய நகரங்களில் விரிவுப்படுத்தப்படும்
41.மாநிலம் முழுவதும் 25 பகுதிகளில் நாட்டுப்புற பயிற்சி மையம் அமைக்கப்படும்
42.தமிழ் மொழியில் அதிகளவில் மென்பொருள் (சாப்ட்வேர்) உருவாக்கப்படும்
43.தமிழறிஞர்கள் 591 பேர் இலவச பயணத் திட்டம் அமல்படுத்தப்படும்
44.11 தொழில் நிறுவனங்களில் 8 லட்சம் தொழிலாளர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரிவுப்படுத்தப்படும்
45.அனைத்து மாவட்டங்களிலும் ரூ.10 கோடி செலவில் புத்தக திருவிழா நடத்தப்படும்
46.குடிமைப் பணி முதன்மை தேர்வுக்கு தயாராக 1000 மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்
47.தூய்மை பணிகளுக்கு நவீன இயந்திரம்
48.மதுரை, கோவை, திருச்சி, நீலகரியில் ஆதிதிராவிடர் நல விடுதிகள் ரூ.100 கோடியில் கட்டப்படும்
49.பாதாள சாக்கடைகளையும், கழிவுநீர் தொட்டிகளையும் சுத்தப்படுத்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
50.15 மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்