• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரையில் செல்போன் டவரில் பேட்டரி திருடிய நபர் கைது – குற்றச் சம்பவங்களை தடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்…

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் தனியார் செல்போன் நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவரின் அருகே ஜெனரேட்டர் மற்றும் பேட்டரிகள் வைக்கப்பட்டி இருந்தது. இதை மதுரை திருபரங்குன்றத்தை சேர்ந்த ராஜாமணி என்பவர் பழுது நீக்க சென்ற போது, அங்கு வைக்கப்பட்டு இருந்த பேட்டரிகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே மதுரை கரிமேடு போலீசில் புகார் கொடுத்தனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் செல்போன் டவரில் இருந்து பேட்டரியை திருடியது மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் ராஜிவ் காந்தி என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்ததில் செல் போன் டவரில் பேட்டரி திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து
அவர் திருடிய ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 24 பேட்டரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து இரவு நேரங்களில் நடைபெறும் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, போலீசார் மாநகர் பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் தீவிரம் காட்டவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.