• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மீசை முளைக்கட்டும் அதுவரை அத்தை அத்தை தான் – எச் ராஜா மதுரை விமான நிலையத்தில் பேட்டி

ByKalamegam Viswanathan

Mar 19, 2023

அதிமுகவுடன் கூட்டணி குறித்து அண்ணாமலைக்குரிய கருத்திற்கு எச் ராஜா மதுரை விமான நிலையத்தில் பேட்டி
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா ஆகையால் மீசை முளைக்கட்டும் அதுவரை அத்தை அத்தை தான் என எச் ராஜா கூறினார்.பாஜகவில் கூட்டணி குறித்து எந்த முடிவுகளும் மாநில தலைவரோ மற்ற நிர்வாகிகளும் அறிவிக்க முடியாது ஆலோசனைகள் வழிமுறைகள் கருத்துக்களை பதிவு செய்யலாம் ஆனால் முடிவு கூட்டணி குறித்து முடிவு எடுப்பது பாஜகவின் பாராளுமன்ற குழு மட்டுமே .கடந்த இரு நாட்களுக்கு முன் மாநில தலைவர் அண்ணாமலை தேசிய மலர் அணி தலைவர் மானதி சீனிவாசன் ஆகியோர் பாஜகவுடன் கூட்டணி இல்லை என கூறியது குறித்து செய்தி வந்துள்ளது அது உண்மை அல்ல பாஜக அதிமுக கூட்டணி குறித்து முடிவு செய்ய வேண்டியது மாநில தலைவரோ மற்ற நிர்வாகிகளோ கிடையாது
கூட்டணி குறித்து வழிமுறைகள் மட்டுமே கருத்துக்களை பதிவு செய்ய முடியும் இது முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் காலத்திலும் அதற்கு முன்னர் சுந்தர் பண்டரி காலத்திலும் இருந்து நடைமுறையில் வந்துள்ளது ஆகவே மாநில கூட்டத்தில் கூறப்படும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு மத்திய குழு மட்டுமே விவாதித்து முடிவு செய்யப்படும் என எச் ராஜா கூறினார்.அதிமுக பாஜக கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு இது குறித்து மத்திய குழு தான் முடிவு செய்யும் அத்தைக்கு மீசை முளைத்தால் தான் சித்தப்பா அதுவரை அத்தை அத்தை தான் என கூறினார்
திருச்சியில் கே என் நேரு சிவா எம் பி இறைவனுடைய ஏற்பட்ட தற்காலிக சமரசம் வெளிப்படையாகவே தெரிகிறது மேலும் கத்தி கம்பு போன்றவற்றை கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் சிவா அவர்களின் வீடுகளில் தாக்கியுள்ளனர் காவல் நிலையத்தை தாக்கியுள்ளனர் ஆனால் இதுவரை யாருமே கைது செய்யப்படவில்லை அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பது உண்மை மேலும் இது தற்காலிகமான சமரசமாகவே தெரிகிறது உடைந்த பானை ஒட்டாது என்பது போல் உள்ளது.அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் எனக் கூறிய கேள்விக்குநான் சமீபத்தில் கோவை சென்று இருந்தேன் அங்கு எனது 40 ஆண்டு கால நண்பர் லேபிள் கலந்து கொண்டு டெல்லி செல்லும் முன் கோவையில் சேமா வேலுச்சாமி பொள்ளாச்சி ஜெயராமன் நாயுடுகளை சந்தித்தேன் அவர்களுக்கு எந்த விதமான கருத்துகளும் இல்லை ஒரு சில தலைவர்கள் பதில் கூறியிருக்கலாம் அதற்கு பதில் கூற முடியாது என எச். ராஜா கூறினார்..