• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மேல்மருவத்தூர் ஆன்மிக பீடத்திற்கு வாரிசாக, ஆன்மீக இலவல் பா.செந்தில்குமார் அவர்களை நியமித்துள்ளனர்…

உலகளவில் தமிழில் மந்திரம் சொல்லி அம்மனை போற்றும் வழிபாட்டுத் தலங்களில் பிரசித்தி பெற்றது மேல்மருவத்தூர். அப்படிப்பட்ட சித்தர் பீடத்திற்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி நிறுவனர் அருள்திரு பங்காரு அடிகளாரின் சீரிய முயற்சியால், கடுமையான உழைப்பால், உருவாக்கப்பட்டது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம்.

மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு “அம்மா” அவர்கள், தனது ஆன்மிக வாரிசாக, இளைய தெய்வம் அருள்திரு சின்னவர் அருமை அண்ணார் ஆன்மீக இலவல் பா.செந்தில் குமார் அவர்களை நியமித்து அருளாணை வழங்கினார்கள்.

இனி வரும் காலங்களில் ஆலய செயல்பாடுகளும், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க செயல்பாடுகளும், மாவட்ட நிர்வாகம் , சக்தி பீடங்கள் மற்றும் மன்றங்கள் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும், ஆன்மிக குரு அருள்திரு “அம்மா” அவர்களின் அருளாசியோடு, இளைய தெய்வம் மருவூர் சின்னவர் அண்ணன் செந்தில்குமார் அவர்களின் வழிகாட்டுதலின் படி நடக்க வேண்டும் எனவும் அருளாணை வழங்கினார்கள். என மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் தெரிவித்துள்ளது.