• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

முள்ளன் பன்றியை கடத்திய கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது

சேரம்பாடி அடுத்துள்ள தமிழக எல்லை பகுதியான சோலாடி சோதனை சாவடியில் முள்ளன் பன்றியுடன் சிக்கிய கேரளா மாநிலத்தை சேர்ந்த மூவர் மற்றும் அவர்கள் பயணித்த கார் பறிமுதல் செய்யப்பட்டது
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து மாருதி ஆல்டோ கார் KL.46.B.5833 என்ற பதிவு எண் கொண்ட வாகனத்தில் கேரளாவைச் சேர்ந்த சிராஜுதீன், அப்துல், முனீர், ஆகிய மூவர் கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தபோது சேரம்பாடி காபி காடு பகுதியில் சாலையின் குறுக்கே வந்த முள்ளான் பன்றியை இவர்கள் காரில் மோதியதில் முள்ளான் பன்றி இறந்தது அதனை சாக்கு மூட்டையில் கட்டி எடுத்து சென்றதாக கூறப்படுகிறது,
இந்நிலையில் சோலாடி காவல்துறை சோதனை சாவடியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இவர்கள் மூவரும் சென்ற கார் தணிக்கை செய்யப்பட்டது.

அப்பொழுது காரின் டிக்கியில் ரத்த கசிவு காணப்பட்டது எனவே சந்தேகம் அடைந்த காவல்துறையினர் சோதனை செய்தபோது முள்ளான்பன்றி என்று கண்டுபிடிக்கப்பட்டது,உடனடியாக சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது வனச்சரகர் அய்யனார் தலைமையில் வானவர் ஆனந்த் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சிராஜுதீன், அப்துல், முனீர், ஆகிய மூவரையும் கைது செய்து அவர்கள் பயணித்த கார் மற்றும் முள்ளான் பன்றியை பறிமுதல் செய்து பின்பு மருத்துவ பரிசோதனைக்கு பின் பந்தலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கூடலூர் கிளை சிறையில் மூவரையும் அடைத்தனர் இச்சம்பவத்தின் போது சேரம்பாடி வனசரகர் அய்யனார் .வன பாதுகாப்பு விரைவு படைராதாகிருஷ்ணன். வனவர் ஆனந்த். வனகாப்பாளர் குணசேகரன். ராபர்ட் வனகாப்பாளர். ஞான மூர்த்தி வன காப்பாளர். பார்த்திபன் வனகாவலர்.ஆகியோர் உடன் இருந்தனர்…