• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஓடிடியில் நேரடியாக வெளியான டாப்ஸியின் ’ராஷ்மி ராக்கெட்’

Byமதி

Oct 15, 2021

அதிகாலை 12 மணிக்கு ஜீ 5 ஓடிடி தளத்தில் ‘ராஷ்மி ராக்கெட்’ வெளியாகியுள்ளது.

ஆடுகளம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் டாப்ஸி. இவர் திரைத்துறைக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.இதை கொண்டாடும் வகையில் ’அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.

டாப்ஸி நடிப்பில் அகர்ஷ் குரானா இயக்கியுள்ள ‘ராஷ்மி ராக்கெட்’ இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது. விளையாட்டுக் கதைக்களத்தைக்கொண்ட இப்படத்தின் கதையை எழுதியிருப்பவர் ‘ஒரு கல்லூரியின் கதை’, ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படங்களின் இயக்குநர் நந்தா பெரியசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று அதிகாலை 12 மணிக்கு ஜீ 5 ஓடிடி தளத்தில் ‘ராஷ்மி ராக்கெட்’ வெளியாகியுள்ளது.