• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை சக்குடி ஜல்லிக்கட்டு போட்டி

Byp Kumar

Mar 11, 2023

மதுரை சக்குடி ஜல்லிக்கட்டு போட்டி.! பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது., பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்
மதுரை மாவட்டம் சிலைமான் அருகேயுள்ள சக்குடி கிராமத்தில் தை மாதத்தில் நடைபெறக்கூடி உலக புகழ்பெற்ற 3 ஜல்லிக்கட்டு போட்டிக்கு அடுத்தபடியாக மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய சக்குடி ஸ்ரீமுப்புலிசுவாமி கோவில் உற்சவ ஜல்லிக்கட்டு போட்டியாக நடைபெறுகிறது., இதில்., 1000 ஜல்லிக்கட்டு காளைகள்., 630 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டு 8 சுற்றுகளாக நடைபெறுகிறது.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க கூடிய மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனையானது அருகே உள்ள தனியார் பள்ளியில் நடைபெறுகிறது., மாடுபிடி வீரர்கள் ஏதேனும் போதை வஸ்துக்கள் உண்டார்களா.? அவர்கள் எடை, உயரம் அவர்களுக்கு உடலில் வேறு ஏதும் காயம் உள்ளதா என 20 மருத்துவர்கள் 30-க்கும் மேற்பட்ட மருத்துவ செவிலியர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.

போட்டியின் போது காயம் ஏற்பட்டால் 6க்கும் மேற்பட்ட 108 அவசர சிகிச்சை ஊர்திகள் தயார் நிலையில் உள்ளது. அதே போல்., 1000 காளைகள் போட்டியில் பங்கேற்கும் காளைக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது., டோக்கன் வழங்கப்பட்ட மாடுகள் மற்றும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியும்., போலியான டோக்கனுடன் வருகை தரும் நபர்களை தடுத்து நிறுத்த இந்த முறை காளைகளுக்கு வழங்கப்பட்ட டோக்கனுடம் 20 ரூபாய் தாலுடன் வழங்கப்பட்டுள்ளது. அந்த 20 ரூபாய் தால் காளைகள் பரிசோதனை செய்யும் இடத்திற்கு வரும்பொழுது மற்றொரு டோக்கன் வழங்கப்படுகிறது. அங்கு காளைகளுக்கு ஏதேனும் போதை வஸ்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளதா.? காளைகளின் உயரம், இரு கொம்புகளுக்கு இடையே உள்ள அளவு, காளைகளுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சான்றிதலுடன் வருகை தரும் மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என அனைவரும் போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த மருத்துவ பரிசோதனையில் 25 மருத்துவர்கள் 65 மருத்துவ உதவியாளர்கள்., கொண்ட குழு உள்ளது தொடர்ந்து., போட்டியின் போது காளைகளுக்கு காயம் ஏற்பட்டால் ஒரு கால்நடை அவசர ஊர்தி தயார் நிலையில் உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் 1000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவருடன் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் P.ராஜசேகருடன் கொடியசைத்து துவக்கி வைத்தனர். சக்குடி ஸ்ரீமுப்புலிசுவாமி கோவில் காளை முதல் காளையாக ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்த்து விடப்பட்டது.