• Mon. Apr 29th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 6, 2023
  1. நாற்கவிராச நம்பி எழுதிய நூல்?
    அகப்பொருள்
  2. மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல்?
    பேகன்
  3. முற்றியலுகரத்தில் முடியும் எண்?’
    7
  4. பத்துப்பாட்டு நூல்களில் அளவில் சிறியது?
    முல்லைப் பாட்டு
  5. எழுவாய் தானே ஒரு செயலை செய்யுமாயின் அது ————– எனப்படும்?
    தன்வினை
  6. பொருள்பட சொற்றொடர் அமைந்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டு?
    யாதும் ஊரே யாவரும் கேளீர்
  7. ”அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல்
    தலை”-இக்குறளில் அமைந்துள்ள அணி யாது?
    உவமையணி
  8. ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனக் கூறியவர்?
    திருமூலர்
  9. ”காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக்
    கும்பிட்டு காலன் ஓடிபோவானே” எனப் பாடியவர்?
    தேசிக விநாயகம் பிள்ளை
  10. வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வர ‘ண” கர மெய் ————- ஆக மாறும்?
    ”ட” கர மெய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *