• Tue. Dec 10th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 7, 2023
  1. செய்யுளில் முதற் சீரின் முதலெழுத்தோடு பின்வரும் சீர்கள் ஒன்றோ பலவோ
    முதலெழுத்து ஒன்றி வருவது?
    மோனை
    2.”ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு” பாடலின் ஆசிரியர்?
    சத்திமுத்தப் புலவர்
  2. ”நாள்” எனும் வாய்ப்பாட்டின் இலக்கணம்?
    நேர்
  3. வெண்பா எத்தனை வகைப்படும்?
    ஐந்து வகைப்படும்
  4. அடியின் வகை?
    ஐந்து
  5. வஞ்சிப்பாவின் ஓசை?
    தூங்கலோசை
  6. இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்?
    மூன்று
  7. இலக்கண முறைப்படி இல்லையாயினும் இலக்கணமுடையவை போல தோன்றுவது?
    இலக்கணப்போலி
  8. சான்றோர் அவையில் பயன்படுத்த இயலா சொல்லை வேறு சொற்களால் பயன்படுத்துவது? இடக்கரடக்கல்
  9. வலிமிகுந்த சொல்லுக்கு எடுத்துக்காட்டு?
    பலாச்சுளை