• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் பேரூராட்சியில்குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் ஆய்வு

ByKalamegam Viswanathan

Mar 5, 2023

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் சிவதாஸ் மீனா நேரில் ஆய்வு செய்தார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்க அரசு கூடுதல் செயலர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட அரசு துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து.மூலதன மானியத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் நவீன எரிவாயு தகனமேடை, நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் கட்டப்படும் கழிவுநீர் வடிகால் கட்டுமான பணிகள், வளமீட்பு பூங்காவில் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். பேரூராட்சிகளின் இயக்குனர் கிரன் குராலா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, கூடுதல் இயக்குனர் மலையமான் திருமுடிகாரி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன், பேரூராட்சி செயல் அலுவலர், சுகாதார ஆய்வாளர், அலுவலக பணியாளர்கள், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்…