• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மெழுகுவர்த்தியை பற்ற வைத்த போது நிகழ்ந்த விபரீதம்- மூதாட்டி பலி

ByS.Navinsanjai

Mar 5, 2023

பல்லடம் அருகே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் வெளிச்சத்திற்காக மெழுகுவர்த்தியை கட்டிலின் அருகே வைத்து பற்ற வைத்த போது மூதாட்டி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாப பலியானார்.உடலை கைப்பற்றி பல்லடம் போலீசார் தீவிர விசாரணை.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மகாலட்சுமி நகர், எட்டாவது வீதி வடக்கு பகுதியில் வயதான தம்பதியரான பொன்செட்டி 95 மற்றும் அவரது மனைவி அமிர்தம்மாள் 85 ஆகியோர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர் இவர்களது இரண்டு மகன்களும் சற்று தொலைவில் மற்றொரு வீதியில் அவரவர் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர் இந்நிலையில் திருமண விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இரண்டு மகன்களின் வீட்டாரும் வெளியூர் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று மாலை மகாலட்சுமி நகர் பகுதியில் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின்வாரிய ஊழியர்கள் பழுது நீக்குவதற்காக வேலை செய்து கொண்டு இருந்துள்ளனர்.

வீடு இருட்டாக இருந்ததால் வயதான மூதாட்டி அமிர்தம்மாள் அப்பகுதியில் உள்ள கடையொன்றுக்கு சென்று மெழுகுவர்த்தி வாங்கி வந்து அவர் படுத்திருக்கும் நைலான் கடலின் அடியில் அந்த மெழுகுவர்த்திகையை பற்ற வைத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியிலிருந்து தீ கட்டிலுக்கு பரவியதில் அதன் மேல் படுத்திருந்த மூதாட்டி அமிர்தம்மாள் சுதாரிப்பதற்குள் தீப்பிடித்து எரிந்து அலறி துடித்துள்ளார்.மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்த போது அமிர்தம்மாள் உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர்.மேலும் தரையில் படுத்து இருந்த மூதாட்டியின் கணவர் பொன் செட்டி 95 என்பவரை பத்திரமாக மீட்டு வெளியேற்றினர். மேலும் இந்த விபத்தில் மூதாட்டி அமிர்தம்மாள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியானார்.இது குறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற பல்லடம் போலீசார், உயிரிழந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதனைத் தொடர்ந்து இந்த தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லடம் அருகே மகாலட்சுமி நகரில் மெழுகுவர்த்தி பற்ற வைத்த போது எதிர்பாராத விதமாக கட்டிலின் மீது படுத்திருந்த மூதாட்டி ஒருவர் உடல் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.