• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நடுக்குவாதம் என்னும் நோய்க்கு எலக்ட்ரோடு கருவி மூலம் அறுவை சிகிச்சை

Byஜெ.துரை

Feb 28, 2023

நடுக்குவாதம்(பார்க்கின்சன் ) என்னும் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எலக்ட்ரோடு கருவியை மூளைக்கு உள்ளே செலுத்தி நோயை எந்த அளவுக்கு கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை வடபழனியில் அமைந்துள்ள போர்டிஸ்ட் மருத்துவமனையில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில்நரம்பியல் துறை தலைவர் டாக்டர் கே. பானு வழிகாட்டுதலின் கீழ் டாக்டர் விகாஸ் அகர்வால் தலைமை தாங்கினார். டாக்டர் சுபா சுப்பிரமணியன்,டாக்டர் கே.சுதாகர், மற்றும் போர்டிஸ் மருத்துவமனை மண்டல இயக்குநர் வெங்கட பனிதர் நெல்லூரி ஆகியார் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பார்க்கின்சன் நோயைப் பற்றி விளக்கவுரை ஆற்றினர்.


இதனை தொடர்ந்து நரம்பியல் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.விஸ்வநாதன் நமது செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
இந்த துல்லியமான நரம்பியல் அறுவை சிகிச்சை ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான விகிதத்தில் நாம் உணர கூடிய ஒரு வகையான அறுவை சிகிச்சையாகும். இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 10 மணிநேரம் தேவைப்படும் அது மட்டும் இன்றி இந்த அறுவை சிகிச்சை செய்யும் ஒரு நாளுக்கு முன்பாகவே ஸ்பெசல் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து அதன் பின்னர் அறுவை சிகிச்சை நாள் மற்றும் சிடி ஸ்கேன் செய்து கணினி மூலம் இணைத்து அதன் பின்பு தான் அறுவை சிகிச்சை நடைபெறும்.இந்த அறுவை சிகிச்சையின் போது மூளைக்கு உள்ளே எலக்ட்ரோடு கருவியை உள்ளே செலுத்தும் போது நரம்பியல் மற்றும் மருத்துவ சிகிச்சை நிபுணர்களும் உடன் இருப்பார்கள் அப்போது அந்த குறிப்பிட்ட இடத்தில் எலக்ட்ரோடு கருவிய செலுத்திய உடனே அவருக்கு அது எந்த அளவு வேலை செய்கிறது என்று அப்போதே தெரிந்து கொள்ளலாம் அப்போது அவர் மயக்க நிலையில் இருக்க மாட்டார். ஒரு பக்கம் அறுவை சிகிச்சை நடைபெறும் போது இன்னொரு பக்கம் மருத்துவ சிகிச்சை நிபுணர் குழு பரிசோதனை செய்து கொண்டிருப்பார்கள்.
அறுவை சிகிச்சை முடிந்த பின்பு 2 வாரத்திற்கு பிறகு நோயாளிக்கு உடம்பில் ஒரு பகுதியில் பேட்டரி ஒன்று பொருத்தப்பட்டிருக்கும் அந்த பேட்டரியின் ரிமோட் கண்ட்ரோல் மூலமாக எந்த அளவுக்கு கரண்ட் எந்த இடத்தில் செலுத்தினோம் எவ்வளவு செலுத்தினோம் என்று நரம்பியல் நிபுணர் பிரிவினர் அதை நிர்ணயிப்பார்கள் இந்த அறுவை சிகிச்சை செய்வது மூலம் நோயாளி தனது வேலையை வழக்கமாக செய்வது போல் செய்யலாம் இது தான் இந்த அறுவை சிகிச்சைகான வெற்றி என்று கூறினார்.