• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நத்தம் மாரியம்மன் கோவில் காப்பு கட்டும் ரசீதில் முறைகேடு

ByKalamegam Viswanathan

Feb 26, 2023

நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழா காப்பு கட்டும் ரசீதில் முறைகேடு ? மாரியம்மன் கோவில் எழுத்தரை பணியிட மாறுதல் செய்ய பரிந்துரை
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோவில் தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்றது இக்கோவிலில் மாசிப் பெருந்திருவிழா கடந்த 20 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மறுநாள் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்து காப்பு கட்டி தங்களது 15 நாள் விரதத்தை தொடங்கினர்.இதில் காப்பு கட்டுவதற்கு 20 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது இந்நிலையில் மாரியம்மன் கோவில் எழுத்தர் முனியாண்டி காப்புக் கட்டும் ரசீதை ஜெராக்ஸ் எடுத்து வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக  சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அதன் பெயரில் திண்டுக்கல் இந்து சமய அறநிலைத்துறை இணை இயக்குனர் பாரதி உத்தரவின் பெயரில் நத்தம் மாரியம்மன் கோவில் மற்றும் அலுவலகத்தில் உதவி ஆணையர் சுரேஷ் விசாரணை செய்தார். விசாரணையின் போது குற்றச்சாட்டுக்கு ஆளான எழுத்தர் முனியாண்டி தனது மொபைலை சுவிட்ச் ஆப் செய்து விட்டு பணிக்கும் வராமல்,  விசாரணைக்கும் ஆஜராகவில்லை எனவே திண்டுக்கல்
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி கமிஷ்னருக்கு எழுத்தர் முனியாண்டியை இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்துள்ளார்.  மேலும் விசாரணைக்குப் பின்பு  தவறு நடந்திருப்பது உறுதியானால் எழுத்தர் முனியாண்டி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கின்றனர். நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா நடைபெற்று வரும் சூழ்நிலையில் எழுத்தர் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் வந்துள்ளது  பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் முனியாண்டி கடந்த 10 ஆண்டுகளாக நத்தம் மாரியம்மன் கோவிலில் எழுத்ததாக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது