• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி அய்யா வைகுண்டரின் 191 வது உதய தின விழா

கன்னியாகுமரி. அய்யா வைகுண்டரின் 191 வது உதய தின விழாவை முன்னிட்டு மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி நடைபெற்றது.
அய்யா வைகுண்டர் வாலிபால் கிளப், சார்பில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும் சுவாமி தோப்பு அய்யா வைகுண்ட தலைமை பதி வளாகத்தில் நடைபெற்ற ஆண்கள் பெண்கள் கலந்து கொள்ளும் மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டியை மாநில காங்கிரஸ் செயலாளர் S. ஜோதி தொடங்கி வைத்தார் .

அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை தலைவர் வழக்கறிஞர் பால ஜனாதிபதி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். பங்கு தந்தை பால்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அய்யா வைகுண்டர் வாலிபால் கிளப் தலைவர் பார்த்தசாரதி, திமுக பிரமுகர் வழக்கறிஞர், தாமரை பாரதி . மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.