திருப்பரங்குன்றம் நாகமலை புதுக்கோட்டை அருகே சம்பக்குளம், புதுக்குடி, கிழாநேரி பகுதிகளில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் உட்பட 300 பேர் சாலை மறியல்.


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள சம்பக்குளம், புதுக்குடி , கிழா நேரிமூன்று கிராமங்களில் சாலை வசதி செய்து தரக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து மூன்று கிராம மக்கள் சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .இதனால் மதுரை – மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாகமலைபுதுக்கோட்டை போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.










