• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மஞ்சூரில் இரண்டு ஏக்கரை இரவில் துவசம் செய்த யானை

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த பெரியார் நகர் பகுதியில் இரண்டு ஏக்கர் கேரட் தோட்டத்தை முற்றிலும் சேதப்படுத்திய காட்டு யானை விவசாய நிலத்தைச் சுற்றியும் தீமூட்டி காவல் காத்தும் யானை அட்டகாசம் பொதுமக்கள் விவசாயிகள் பீதி.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன. பெரும்பாலானார் தேயிலை தோட்டத்தையும் விவசாய நிலங்களையும் நம்பியே உள்ளனர் தேயிலை தோட்டங்களில் காட்டுரிமை மான் காட்டு பன்றிகள் படையெடுத்து வருவதால் தேயிலை பறிக்க ஆட்கள் பற்றாக்குறையாலும் தேயிலை விலை வீழ்ச்சியாலும் தேயிலை பறிக்க ஆர்ப்பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

விவசாய நிலங்களில் காய்கறிகளை கேரட் கோஸ் பீட்ரூட் பீன்ஸ் முட்டைகோஸ் நூற்கோள் மேரக்காய் பயிரிட்டு வருகின்றனர் கடந்த பத்து நாட்களாக மஞ்சூர் பெரியார் நகர் மேல் குந்தா பகுதிகளில் காட்டு யானை ஒன்று முகாமிட்டுள்ளது விலை நிலங்களில் பயிரிட்டு அறுபடை நிலையில் உள்ள காய்கறிகளையும் தோட்டத்தில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி வருகின்றன.

விலை நிலங்களை சுற்றி தீ மூட்டி காவலாளிகள் காவல் காத்து வருகின்றனர் அதையும் மீறி நேற்று இரவு வேலைகளை பெயர்த்து தண்ணீர் பாய்ச்சி இயந்திரங்களை எல்லாம் உடைத்துவிலை நிலத்துக்குள் புகுந்து சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் போடப்பட்டிருந்த கேரட்டுகள் இன்று சூறையாடிச் சென்றது அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த கேரக்டுகளை யானை சேதப்படுத்தி சென்றதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் தொடர்ந்து பத்து நாட்களாக அட்டகாசத்தில் ஈடுபடுத்தி வரும் யானை வனத்துறையினர் விரட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன் புகார் தெரிவித்தும் புகைப்படக் கலைஞர்களாக மாறிவரும் வனத்துறையினர் புகைப்படங்களை மட்டும் எடுத்துச் செல்வது ஏன் விரட்ட நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் கட்டுவது போன்றவற்றால் விவசாயிகளும் பொதுமக்களும் கவலை தெரிவித்தனர்.