• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பாரதிய ஜனதா கட்சியின் திருமங்கலம் வடக்கு ஒன்றியம் சார்பில் செயற்குழு கூட்டம்

ByKalamegam Viswanathan

Feb 21, 2023

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கீழ உரப்பனூர் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில், பாரதீய ஜனதா கட்சி மதுரை மேற்கு மாவட்டம், திருமங்கலம் வடக்கு ஒன்றியம் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் ஓம் ஸ்ரீ முருகன் சிறப்புரை ஆற்றினார்.மாவட்ட பொருளாளர் சுரேஷ் வரவேற்புரையும், மாவட்டச் செயலாளர் தமிழ் மணி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்


.கூட்டத்தில் பேசிய ஓம் ஸ்ரீ முருகன் , கீழ உரப்பனூரில் தற்போது பெரும்பான்மையாக பாஜக உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இது போன்று அனைத்து கிராமங்களிலும் பாஜகவில் புதிய உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளை தேர்வு செய்து , திருமங்கலம் ஒன்றியம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருப்பதற்கு அனைத்து நிர்வாகிகளும் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.