• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திருமங்கலம் சார் பதிவாளர் வாயிலில் இடத்தகராறு- 3 பேர் கைது

ByKalamegam Viswanathan

Feb 21, 2023

கடந்த இரு தினங்களுக்கு முன்பு, திருமங்கலம் சார் பதிவாளர் வாயிலில் இடத்தகராறில் இரு கோஷயினரிடையே அடிதடி – தடி, கம்பியால் தாக்குதல் சம்பவம் – வீடியோ வைரல் – 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் .


மதுரை மாவட்டம் திருமங்கலம் சார் பதிவாளர் அலுவலக வாயில் முன்பு, கடந்த இரு தினங்களுக்கு முன்பு இடத்தகராறில் இரு கோஷயினரிடையே ஏற்பட்ட கைகலப்பில் , தடி மற்றும் கம்பியால் தாக்கியதில், மூன்று பேர் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வீடியோ காட்சி வைரலாகி வந்ததை தொடர்ந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வந்த நிலையில், திருமங்கலம் நகர் போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட திருமங்கலம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டி (40),சுந்தர்ராஜ்(35), மதுரை பைக்காரா பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (29)ஆகிய மூவரை பிடித்து கைது செய்துள்ளனர்..