• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கரும்பு விவசாயிகள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

Byஜெ.துரை

Feb 17, 2023

கரும்பு விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றிடக்கோரி சென்னை தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்றது.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் கரும்பு விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி மாநிலத் தலைவர் எஸ் வேல்மாறன் மற்றும் மாநில செயலாளர் தங்க காசிநாதன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது…
ஒன்றிய அரசின் வேளாண் விரோத கொள்கைகளால் நாடு முழுவதும் விவசாயிகள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர் என்றும் மோடி தலைமையிலான பாஜக அரசு விலைப் பொருட்களுக்கு சாமிநாதன் குழு பரிந்துரைப்படி உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சேர்த்து விலை தர மறுக்கிறது என்றும் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்திட மறுக்கும் மோடி அரசு, முதலாளிகள் வாங்கிய 11 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்கின்றனர்.
ஆனால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை பறித்திட வகை செய்யும் மின்சார மசோதாவை திரும்பப் பெற மறுக்கின்றனர் என்றும் 9.5 சதவீதம் பிழிதிறனுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூபாய் 5000 விலை தர வேண்டும் என்ற கரும்பு விவசாயிகள் கோரிக்கைகளை பாஜக அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி தமிழ்நாட்டில் கரும்பு விவசாயிகள் நலனை பாதுகாத்திட மாநில அரசு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிடக்கோரி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது… இந்தப் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கரும்புகளை கையில் ஏந்திய படி போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.