• Tue. Apr 30th, 2024

சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்ற கூடாது – அன்புமணி ராமதாஸ் பேட்டி….

சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்க முயற்சிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் இல்லையெனில் இந்த மாதம் என் தலைமையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் சேலத்தில் பேட்டி….
சேலம் தாரமங்கலம் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மற்றும் தெற்கு மாவட்ட மூத்த முன்னோடிகள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில் சேலம் மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்து வரும் மேட்டூர் உபரி நீர் திட்டம் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கடந்த ஆட்சியில் ஒரு 550 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது இது போதுமானதாக இல்லை எனவே உபரி நீரில் 5 டிஎம்சி தண்ணீரை சேலம் மாவட்ட மக்கள் பயன்படுத்தியிடும் வகையில் விரிவுபடுத்த வேண்டும் எனவும் காலநிலை மாற்றம் மிக முக்கிய பிரச்சினையாக இருக்கப் போகிறது வரக்கூடிய ஆண்டுகள் மிகவும் வெப்பமானதாக இருக்கும் என அறிவித்திருக்கிறார்கள் இதனை எதிர்கொள்ள மழை காலத்தில் கிடைக்கும் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும் என கூறினார்.


மேலும் சேலம் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பதாக மாவட்ட ஆட்சியர் சொல்லி உள்ளார் போதைப் பொருட்களை தடுக்க முதலமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் எஸ்.பி.களுடன் முதலமைச்சர் ஆய்வு நடத்த வேண்டும் போதைப் பொருள் விற்பனையானது கல்லூரிகளை தாண்டி பள்ளிகளில் பரவி உள்ளது இது தொடர்ந்தால் அடுத்த தலைமுறை பாதிப்புக்கு உள்ளாகும் எனவே இதன் மீது உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது வருத்தம் அளிக்கிறது ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 14 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் இதற்கு முழு காரணம் ஆளுநர் தான் என கூறினார் மேலும் இரும்பாலையில் மிகக் குறைந்த விலைக்கு பொதுமக்களிடமிருந்து நிலத்தை எடுத்துள்ளனர் பொதுத்துறை நிறுவனங்களை விற்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது இதனை ஏற்றுக்கொள்ள முடியாது பொதுத்துறை நிறுவனங்களை நிச்சயமாக லாபகரமாக மாற்றலாம் ஆனால் வேண்டுமென்று செய்கிறார்கள் எனவும் பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தால்தான் சமூக நீதி பாதுகாக்கப்படும் பொது நிறுவனங்கள் இல்லையெனில் இட ஒதுக்கீடு கிடைக்காது ஏழை எளிய மக்களுக்கு பெரிய வாய்ப்பு பொது துறை நிறுவனங்களில் தான் கிடைக்கும் சேலம் இரும்பாலையை எக்காரணத்தை கொண்டும் தனியாருக்கு விற்க விடமாட்டோம் இந்த மாதம் எனது தலைமையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம் எனவும் சேலம் இரும்பாலையை லாபகரமாக நடத்த முடியவில்லை எனில் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் இல்லை எனில் விவசாயிகளிடம் நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என கூறினார்.
தொடர்ந்து தமிழகத்தில் போதைப் பொருட்கள் அதிகரித்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர் தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை கடந்த 15 ஆண்டுகளாக வளர்ந்து கொண்டே சென்று தற்போது உச்சத்தை அடைந்துள்ளது குறிப்பாக அண்டை நாடுகளில் இருந்து இந்த போதை பொருட்கள் கொண்டு வரப்படுகிறது மேலும் இது போன்ற போதைப் பொருள்கள் காவல்துறைக்கு தெரியாமல் யாரும் விற்க முடியாது விற்பனை செய்பவர்களை கைது செய்வதுடன் அதற்கு மூல காரணமாக விளங்குபவர்களை கண்டறிய வேண்டும் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் போதுமான காவலர்கள் இல்லை 20,000 பேர் தேவைப்படும் நிலையில் 700 பேர் மட்டுமே போதை பொருள் தடுப்பு பிரிவில் பணியாற்றுகின்றனர் எனவும் எங்களுடைய கொள்கை ஆசை தமிழ் ஈழம் மலர வேண்டும் என்பதுதான் அது எப்படி வர வேண்டும் என்பதை உலகத்தில் உள்ள தமிழர்கள் கூடி முடிவு செய்ய வேண்டும் எனவும் பல நெடுமாறன் சொன்னதில் எந்த அளவிற்கு உண்மை தன்மை இருக்கிறது என தெரியவில்லை அவர் சொன்னபடி வரட்டும் பார்க்கலாம் எனக் கூறினார் மேலும் 2026 ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் அதற்கேற்ற பணிகளை திட்டமிட்டு நடத்தி வருகிறோம் பூத் கமிட்டி அளவில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சியை வலுப்படுத்தி வருகிறோம் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *