• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

டெல்லி பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை

ByA.Tamilselvan

Feb 14, 2023

பிபிசி சர்வதேச ஊடகத்தின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குஜராத் மதமோதல்களின் போது அம்மாநில முதல்வராக இருந்தவர் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி. 2002-ம் ஆண்டு குஜராத் மதமோதல்களில் 1,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். இந்த குஜராத் படுகொலைகள் உலக நாடுகளை உலுக்கியது. இதனால் மோடிக்கு அமெரிக்கா அப்போது பயணத் தடை விதித்திருந்தது. மேலும் குஜராத் மதமோதல்களில் முதல்வராக இருந்த மோடிக்கு தொடர்பிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் இந்த வழக்குகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என மோடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.
அண்மையில் 2002-ம் ஆண்டு குஜராத் இனப்படுகொலைகளை முன்வைத்து பிபிசி சர்வதேச ஊடகமானதுஆவணப் படம் ஒன்றை வெளியிட்டது. இதனையடுத்து பிபிசி ஊடகத்தின் குஜராத் படுகொலை தொடர்பான ஆவணப்படத்தை மத்திய அரசு தடை செய்தது. சமூக வலைதளங்களிலும் இந்த ஆவணப்படம் நீக்கப்பட்டது. ஆனால் பாஜகவுக்கு எதிரான அரசியல் கட்சிகள், இந்த ஆவணப் படத்தை பல மாநிலங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. 2024-ம்
இந்நிலையில் தற்போது டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி ஊடக அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்