• Sun. May 10th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

ஆடை குறைப்பில் மட்டுமல்ல வீடு வாங்குவதிலும் போட்டிபோடும் சமந்தா – ராஷ்மிகா

தெலுங்கு திரையுலகில் சமந்தாவின் போட்டியாளர் ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ச்சுன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற புஷ்பா படத்தில் இருவருமே நடித்திருந்தனர் இவர்களது கவர்ச்சி ஆட்டங்கள் வட இந்தியாவிலும் இவர்களுக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்கியதுடன் இந்திப்பட வாய்ப்புக்கள் குவிய தொடங்கியது அதனால் இருவருமே மும்பையில் தற்போது போட்டி போட்டு வீடு வாங்கியுள்ளனர்
ராஷ்மிகா ஏற்கனவே பல கோடி மதிப்பில்மும்பையில் ஆடம்பர அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கியதாக கூறப்பட்ட நிலையில், அவரை தொடர்ந்து… தற்போது நடிகை சமந்தாவும் மும்பையில் சொகுசு அப்பார்ட்மெண்ட் ஒன்றிய பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தற்போது, மெல்ல மெல்ல மயோசிட்டிஸ் பிரச்சனையில் இருந்து மீண்டு வரும் சமந்தா… அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க உள்ள குஷி, மற்றும் பாலிவுட் திரையுலகிலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சமந்தா… ராஜ் மற்றும் டிகேவுடன் இணைந்து தன்னுடைய இரண்டாவது இந்தி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.
வருண் தவானுடன் இணைந்து சமந்தா நடிக்க உள்ள ‘சிட்டாடல்’ வெப் தொடர் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது. மேலும் இன்னும் சில பாலிவுட் பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருப்பதால்… இந்தி படங்களில் நடிப்பதற்கு சவுகரியமாக மும்பையில் மிகப்பெரிய தொகைக்கு அப்பார்ட்மெண்ட் ஒன்றை சமந்தா வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.