• Sat. May 23rd, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

திருநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டம்

ByKalamegam Viswanathan

Feb 6, 2023

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மத்திய அரசின் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ பங்குகளை பெருமளவில் தனியார் நிறுவனமான அதானிக்கு வழங்கியது. தற்போது அதானி குழும பங்குகள் சந்தையில் மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது. இதனால் இந்நிறுவனத்தில் முதலீடு செய்த எல்ஐசி மற்றும் எஸ்பிஐ பங்குகள் பெருமளவில் வீழ்ச்சி அடை தொடங்கியுள்ளன மேலும் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் நிறுவனம் உள்ளது.

பிரதமர் மோடியின் தலையிட்டால் பொதுத்துறை நிறுவனங்களான எல்ஐசி மற்றும் எஸ் பி ஐ பங்குகள் பெரும்பளவில் அதானி நிறுவனத்திற்கு முதலீடு செய்ய கட்டாயப்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு இருந்துவருகிறது. இதனை கண்டித்து மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டி. திருமங்கலம் ஜெயராமன், மாவட்ட ஒபிசி பிரிவு தலைவர் சரவணபவ’ தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜெராடு சத்தியன் உள்ளிட்டோர் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.