• Wed. Apr 8th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

சேலம் அருகே பிரபல ரவுடி காட்டூர் ஆனந்த் கொடூர கொலை

சேலம் அருகே பிரபல ரவுடி காட்டூர் ஆனந்த், தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம் காட்டூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆனந்த்(44). இவர் மனைவி சத்யா மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வலசையூர் பகுதியில் வசித்து வந்தார். நேற்றிரவு 9 மணியளவில் பிராபாகரன் என்பவருடன் காட்டூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார்

.அப்போது காட்டூர் மயானம் அருகே ஆனந்த் வந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு காரில் தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.
அக்கும்பல் தாக்கியதில் ஆனந்துடன் வந்த பிரபாகரன் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். படுகொலை செய்யப்பட்ட ஆனந்த் மீது கொலை, வழிபறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. முன்விரோதம் காரணமாக ஆனந்த் கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனந்த் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
ஆனந்த் கொலை காரணமாக அப்பகுதியில் பதட்ட நிலை தொடருவதால் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.