• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உதகை எல்க்ஹில் முருகர் கோவிலில் தைப்பூச திருவிழா…

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகைக்கு மகுடம் சூட்டும் விதமாக அமைந்திருக்கும் எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் இக்கோயிலின் தைபூச திரு விழாவின் தேரோட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் துவக்கி வைத்தார்.உதகையில் உள்ள எல்க்ஹில் முருகன் கோவிலில் 6 படைவீடுகளை குறிக்கும் வகையில் 6 மண்டபங்களும், 108 திருநாமங்களை நினைவு கூரும் வகையில் 108 படிகளும் உள்ளன.
மலேசியா நாட்டில் பத்துமலையில் 140 அடி உயரமுள்ள முருகன் சிலை உள்ளது போல் உதகை எல்க்ஹில் முருகன்கோவிலில் 40 அடி உயரத்தில் முருகன் கம்பீரமாக மலை நடுவே எழுந்தருளி உள்ளார். இது தமிழகத்திலேயே மிக உயரமான சிலை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த கோயிலுக்கு செல்லும் போது முதலில் பாத விநாயகர் காட்சி தருகிறார். விநாயகரை தரிசித்து விட்டு, ஜலகண்டேஸ்வரி அம்மன் சன்னிதி இருக்கிறது. அங்கு அம்மன் தாமரை மலரில் 4 கரங்களுடன் அருள் பாவித்து வருகிறார். இங்கு முருகப்பெருமான் தனிக்கோவில் கொண்டு, பாலதண்டாயுத பாணியாக வீற்றிருக்கிறார். தலையில் அக்க மாலையும், ஒரு கரத்தில் தண்டமும், ஒரு கரம் இடுப்பில் வைத்த கோலத்தில் மிக அழகாக காட்சி அளிக்கும் பிரசித்தி பெற்ற இந்த பால தண்டாயுதபாணி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம் மற்றும் வைகாசி விசாகத்தையொட்டி திருவிழா நடைபெற்று வருகிறது.
தைபூச விழாவில் முருகன் சிறப்பு தேரோட்ட நிகழ்ச்சி உதகையில் லோயர் பஜார், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்தது. இந்த பிரசித்தி பெற்ற எல்க் ஹில் முருகன் கோயில் தை பூசம் விழாவில் கலந்து கொள்ள மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள், முருகனுக்கு அரோகரா,கந்தனுக்கு அரோகர, என்ற கோஷங்கள் முழங்க பால தண்டியுதபாணியின் தை பூச திருநாளில் முருகனை போற்றி, வணங்கி, அருள் பெற்று சென்றனர்.
மேலும் நீலகிரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார் இதனை தொடர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்து வருகின்றனர்.