திமுகவிற்கு ஆள தெரியவில்லை ஆளுவதற்கான தகுதியும் இல்லை ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என சேலத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி……
சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்….
திமுகவினர் பல இடங்களில் பட்டியலின மக்களுக்கு எதிராக கொடுமைகளை அதிகம் செய்து வருகின்றனர் வேங்கைவாசல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த நிகழ்வில் குற்றவாளிகள் இன்று வரை கைது செய்யப்படவில்லை.
சேலம் திருமலைகிரியில் திமுக ஒன்றிய செயலாளர் பேச்சை காதில் கேட்க முடியவில்லை பட்டிலின மக்களுக்கு எதிரான இழிவுகள், திமுக ஆட்சியில் அதிகரித்துக் கொண்டே உள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகம் உள்ளது. பெண் காவலர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுகின்றனர். பேருக்கு வழக்குபதிவு செய்து உடனே ஜாமீன் வழங்கியுள்ளனர்.காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் வந்து மிரட்டும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
காவல்துறையினால் எருதுவிடும் விழாவிற்கு முடிவு எடுக்க முடியவில்லை,உளவுத்துறை தோற்றுவிட்டது.மக்களின் பாரம்பரியம்,பண்பாடு எருதுவிடும் விழா இதை நடத்த முடியவில்லை.கள்ளக்குறிச்சியில் பள்ளிக்கூடம் முழுமையாக சூறையாடப்படுகிறதுகாவல்துறையினர் வேடிக்கைப் பார்த்தது.இங்கு என்ன சட்டம் ஒழுங்கு உள்ளது.திமுகவிற்கு ஆளதெரியவில்லை, ஆளுவதற்கு தகுதியானவர்களும் இல்லை. மக்களை காக்க தவறிவிட்டனர். இந்த ஆட்சிக்கு ஜனநாயக முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
திமுக கம்யூனிஸ்ட் கட்சிகள் கடவுள் இல்லை என்று கூறுபவர்கள்.இந்து கோயில்கள் முன்பாக மட்டும்தான் கடவுள் நம்பிக்கை புண்படுத்தி பிரச்சாரம் மற்றும் விளம்பரங்களை செய்து வருகின்றனர். கம்யூனிஸ்டுகள் கடவுள் மீது நம்பிக்கையில்லாதவர்கள்.பழனியில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.பழனியில் கற்பகிரகத்திற்குள் திமுகவினர் சென்று வருகின்றனர். ஆகமவிதிகள் மீறப்பட்டுள்ளது என்று மக்கள் வேதனையில் உள்ளனர்.அவசர காலத்தில் செய்ய வேண்டியதற்கான அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.திமுகவினர்,கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், கம்யூனிஸ்டுகள் கோவில் நடைமுறைகளில் தலையிடுவது அவசியமற்றது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அது சம்பந்தமான முடிவுகள் எடுத்துக் கொள்கிறோம். இதில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி இதன்மூலமாக கலவரத்தை ஏற்படுத்தக் கூடாது.இதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பழனி அருகே சண்முகநதி கரையில் நீராடி காவடி எடுத்து வழிபாடு நடத்துவார்கள். 27 அடி உயர வேல் வைத்து பூஜை செய்து வருகின்றனர்.இதனால் எந்த பிரச்சினையும் இல்லை. காவல்துறையினர் வேல்லை எடுத்துச் சென்றுள்ளனர். கடற்கரைக்குள் பேனா வைப்பதற்கு அனுமதி, அதற்கான வேலைகளை செய்து வருகிறீர்கள். பக்தர்கள் வழிபடும் வேல்லை அகற்ற இருப்பது கண்டிக்கத்தக்கது. வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
திமுகவிற்கு ஆள தெரியவில்லை ஆளுவதற்கான தகுதியும் இல்லை -அர்ஜுன் சம்பத் பேட்டி













; ?>)
; ?>)
; ?>)