• Wed. Jun 10th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

இந்திய ரயில்வே துறைக்கு சிவில் சர்வீஸ் தேர்வு மூலம்..,
அதிகாரிகள் நியமனம்..!

Byவிஷா

Feb 3, 2023

இந்திய ரயில்வே துறையில் நிர்வாக சேவைக்கான (ஐஆர்எம்எஸ்) அதிகாரிகளை தேர்வு செய்ய யுபிஎஸ்சி மூலம் சிறப்பு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தேர்வுக்கு பதிலாக சிவில் சர்வீசஸ் தேர்வு மட்டுமே யுபிஎஸ்சி மூலம் நடத்தப்படும் என்று தற்போது ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்..,
ரயில்வே அமைச்சகம் யுபிஎஸ்சி மற்றும் பணியாளர் நல துறையுடன் கலந்தாலோசனை செய்துள்ளது. இந்நிலையில் 2023-ஆம் ஆண்டில் யுபிஎஸ்சியால் நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் இந்திய ரயில்வே துறைக்கு ஆட்சேர்ப்பு நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.