• Fri. Jan 16th, 2026
[smartslider3 slider="9"] Read Now

கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த எடக்காடு பகுதியில் தமிழக அரசால் வழங்கப்படும் கட்டுமான தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் நீலகிரி மாவட்ட கட்டுமான தொழிலாளர் நல சங்கத் தலைவர் சிவக்குமார் மாமன்ற உறுப்பினர் ஆரி எடக்காடு கவுன்சிலர் சாந்தி முன்னிலையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக எடக்காடு சிவசக்தி சத்தியமூர்த்தி நகர் பகுதியில் 21 நபர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் ஷு ஹெல்மெட் கையுறை கண் கண்ணாடி ஜெர்கின் ரெட் பெல்ட் என கட்டுமான தொழிலாளர்கள் பாதுகாப்புடன் பணியாற்றும் வகையில் அவர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டது.

சுமார் 1500 க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் குந்தா தாலுக்கா பகுதியில் உள்ளனர்.இதில் முதற்கட்டமாக கூடலூர் பகுதியில் வழங்கப்பட்டு வருகிறது.குந்தா தாலுகா குட்பட்ட பகுதியில் 21 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.மீதமுள்ள 1500க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.