• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

ஓடிடி தளத்தில் வெளியாகும் செம்பி

Byதன பாலன்

Jan 30, 2023

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் பிரபு சாலமனின் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான செம்பி திரைப்படத்தில்
கோவை சரளா, குழந்தை நட்சத்திரம் நிலா மற்றும் ‘குக் வித் கோமாளி’ புகழ் அஷ்வின் குமார் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். தனது 10 வயது பேத்தி செம்பிக்கு (நிலா) நிகழ்ந்த கொடுமைக்கு, நீதி கேட்கும் வீரத்தாய் (கோவை சரளா) என்ற பழங்குடியினப் பெண்ணைப் பற்றியது தான் செம்பி திரைப்படம்
பிரபு சாலமனின் இயக்கத்தில் வெளியான மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘செம்பி’ பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகளைக் குவித்துள்ளது. தமிழ் திரையுலகின் மூத்த நகைச்சுவை நடிகை கோவை சரளா இதுவரையிலும் கண்டிராத வித்தியாசமான பாத்திரத்தில்
நடித்திருந்தது விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
‘செம்பி’யாக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள பத்து வயதுக் குழந்தை நட்சத்திரமான நிலா, இந்தப் படத்தைப் பார்த்தவர்களின் மனதைக் கொள்ளை கொண்டார்
ஒளிப்பதிவாளர் ஜீவனின் மனதை அள்ளும் காட்சிகளும், நிவாஸ் K பிரசன்னாவின் பின்னணி இசையும் ‘செம்பி’ திரைப்படத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றியது ஆனால் திரையரங்குகளில் வணிகரீதியாக வெற்றிபெறவில்லை பிப்ரவரி 3 முதல் செம்பி திரைப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது