• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

இன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு..!!

ByA.Tamilselvan

Jan 29, 2023

தென்கிழக்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும் என்பதால் தமிழ்நாட்டில் இன்று சிலஇடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல்
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றும் அதே பகுதிகளில் நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும். அதன் பிறகு, தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து ஜன. 31 அன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து பிப்.1-ம் தேதி இலங்கை கடற்பகுதிகளை சென்றடையகூடும் இதன் காரணமாக,ஜன. 29-ம் தேதி வடதமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.