• Sun. Apr 28th, 2024

பிப். 3ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு…

ByA.Tamilselvan

Jan 28, 2023

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2க்கான தேர்வு பிப்ரவரி 3ம் தேதி தொடங்கி பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஹால்டிக்கெட்டை ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை 2022 மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 26ம் தேதி வரை பெறப்பட்டது. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தற்போது பிப்ரவரி மாதம் 3ம் தேதி முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை உள்ள தேதிகளில் தாள் 2க்கான உரிய தேர்வுகள் கணினி வழியில் மட்டுமே நடத்தப்பட உள்ளது. கணினி வழித் தேர்விற்காக (Computer Based Examination) பயிற்சித் தேர்வு (Practice Test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம். ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 பிப்ரவரி 3ம் தேதி முதல் 14ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த தேர்விற்கான கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், தேர்விற்கும் மூன்று நாட்கள் முன்னதாக அவர்களுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்களுக்கு எந்த மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
எந்த தேர்வு மையம் என்பது மூன்று நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும். ஹால் டிக்கெட்டில் தேர்வு மையங்களை மாற்ற வேண்டுமென கூறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் https://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டில் தேர்வு மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முடிவே இறுதியானது. தேர்வை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யவும் ஒத்தி வைக்கவும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அதிகாரம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *