• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஏஐடியுசி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம்

எஸ் ஜாகிர் உசேன்
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி சார்பில் வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் ஏ ஐ டி யூ சி மாவட்ட குழு தலைவர் கே எம் ஆரி தலைமையில் நீலகிரி மாவட்ட கட்டிட தொழிலாளர் சங்க செயலாளர் எல் சிவக்குமார் தங்கராசு தோட்டத் தொழிலாளர் சங்க தலைவர் எல். மாதேவன் முன்னிலையில் ஊராட்சி பணியாளர் சங்க ஏ ஐ டி யு சி ஆர் ரகுநாதன் சிறப்புரையாற்றி மறியல் போராட்டத்தை துவக்கி வைத்தார்.


இதில் 60க்கும் மேற்பட்ட ஏ ஐ டி யு சி நிர்வாக தொழிலாளர்கள் கலந்துகொண்டு தொழிலாளர் விரோத கொள்கைகளையும் நான்கு சட்ட தொகுப்புகளையும் கைவிடக் கோரியும் ஆஷா அங்கல்வாடி ஊராட்சி தேயிலைத் தோட்ட தொழிற்சாலை தூய்மை காவலர்களுக்கு 240 நாட்கள் பணிபுரிந்தல் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் ரூ.21,000 குறையாத ஊதியம் வழங்க வேண்டும். 6ஆயிரத்திற்கு குறையாத ஓய்வூதியம் கட்டிட தொழிலாளர்கள் உட்பட அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் வழங்கிடு .கட்டட தொழிலாளர் நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி நிதி பலன்களை உயர்த்த வேண்டும்.
50 வயது நிறைவடைந்த பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் தாய்சோலை எஸ்டேட்டில் 2018 ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பிஎப் ஓய்வூதிய நிலுவை சம்பளம் பணிக்கொடை உடனடியாக வழங்கிட வேண்டும் தமிழ்நாடு அரசு அறிவித்த தினசம்பலம் 450 நிலுவைத் தொகை வழங்குவதுடன் முறையான மாத சம்பளத்தை ஏழாம் தேதிக்கு வழங்க வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மஞ்சூர் பஜாரில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்ட காரணமாக மஞ்சூர் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர் மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை அறுபதற்கும் மேற்பட்டவர்கலை கைது செய்து காவல் வாகனம் மூலம் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர் தங்க வைக்கப்பட்டவரை மாலை 5 மணி க்கு காவலர்கள் விடுவித்தனர்