• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு பெயர் சர்ச்சை-ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

ByA.Tamilselvan

Jan 18, 2023

தமிழ்நாடு-தமிழகம் என பெயர் சர்ச்சை விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் …காசி மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே உள்ள தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். அந்த காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை.

தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம். தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ, அனுமானம் செய்து கொள்வதோ தவறானது. வரலாற்று பண்பாட்டு சூழலில் தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன். எனது பேச்சின் அடிப்படை புரியாமல் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்கள் விவாதப் பொருளாகி உள்ளது. என அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.