• Sun. Mar 15th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

வடக்குத் தாமரைகுளத்தில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா

கன்னியாகுமரி மாவட்டம் வடக்குத் தாமரைகுளத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 106 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், திரைப்பட நடிகர் அருள்மணி, வடக்குத்தாமரைகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் என்.பார்த்தசாரதி, ஊராட்சி அதிமுக பொறுப்பாளர்கள் எம்.முத்துசாமி, நாகராஜன், நேசமணி, ராமநாதன், நந்தகிரீஸ், ராமானுஜம், அழகப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.