• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மஞ்சூரில் நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கல்

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது
பொங்கல் திருநாளை முன்னிட்டு பரிசு தொகுப்பு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு வழங்கினார்.அதனை தொடர்ந்து தமிழக முழுவதும் பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் இன்று தமிழக அரசின் பொங்கல் பரிசு திட்டம் இன்று துவங்கப்பட்டது

இதில் மஞ்சூர் பகுதியில் உள்ள இரண்டு நியாயவிலை கடைகளில் பொங்கல் தொகுப்புகள் பயனாளிகளுக்கு பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு கிலோ ஒரு முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது பொங்கல் வரை தொகுப்புகள் வழங்கப்படுவதாகவும் நியாய விலைக் கடை மூலமாக வழங்கப்பட்ட துண்டு சீட்டின் மூலமாக வந்து பெற்றுக் கொள்ளலாம் என விற்பனையாளர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளனர்