• Thu. Jan 15th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அதிக வட்டி கேட்டு மிரட்டிய அதிமுக பிரமுகர் கைது

Byஜெ.துரை

Jan 6, 2023

சென்னை சாலிகிராமத்தில் தனியார் கடை உரிமையாளரிடம் அதிக வட்டி பணம் கேட்டு மிரட்டி அதிமுக பிரமுகர் அருவாளை காட்டி மிரட்டியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலிகிராமம் தசரதபுரம் காவேரிரங்கன் தெருவில் அமைந்துள்ள எல்.கே.வி ஸ்டோர் கடையின் உரிமையாளர் ஞானசேகர். இவர் அதிமுக பிரமுகர் வெங்கடேசனிடம் 20,000 ரூபாய் வட்டிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது, இந்த நிலையில் அவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றுள்ளார், தற்பொது அதிமுக பிரமுகர் பணம் வாங்கியவர் கடையில் இருந்த அவர் மகனிடம் பணத்தைகேட்டு மிரட்டும் தோணியில் பேசி உள்ளார். அதற்கு அவர் என் தந்தை சபரிமலையில் இருந்து வந்ததும் கேட்டுக் கொள்ளுமாறு கூறியுள்ளார்,

இருந்த போதிலும் அவர் மேலும் மிரட்டி விட்டு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் தந்தை அடுத்த நாள் வந்து அந்த அதிமுக பிரமுகரிடம் கேட்ட பொழுது தன் கையில் வைத்திருந்த அருவாவை காட்டி மிரட்டி உள்ளார். அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை தடுத்து, கடையின் உரிமையாளரை காப்பாற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வணிக சங்கத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட வரும் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர். ஆர் 2 காவல் நிலைய ஆய்வாளர் புகாரை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து தற்போது அதிமுக பிரமுகர் காவல்துறை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.