• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

விஜய்சேதுபதி நடிப்பில் உருவான ஃபார்ஸி, கிரைம் த்ரில்லர் பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியாகிறது

ராஜ் மற்றும் டிகே தயாரி ப்பில், க்ரைம் த்ரில்லர் ஷாஹித் கபூர் மற்றும்,விஜய் சேதுபதி நடித்துள்ள தொடரில் கே கே மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிப்ரவரி 10 முதல் இந்தியாவிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.மிகப்பெரிய வெற்றி கண்டு சாதனை புரிந்த தி ஃபேமிலி மேன் ஐ உருவாக்கிய மிகப்பிரசித்திபெற்ற படைப்பாளிகளின் அடுத்த உருவாக்கம் தான் ஃபார்ஸி. திரைப்படம். ராஜ் & DK இன் தயாரிப்பு நிறுவனமான D2R ஃபிலிம்ஸின் கீழ் தயாரிக்கப்பட்ட, இந்த நட்சத்திரக்கூட்டம் நிறைந்த தொடரானது பாலிவுட்டின் மனம் கவர்ந்த ஷாஹித் கபூர் மற்றும் கோலிவுட்டின் மிகவும் அன்புக்குரிய நட்சத்திரமான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஆகியோரின் டிஜிட்டல் அறிமுகத்தைக் குறிக்கிறது.
நகைச்சுவை காட்சிகள் அடங்கிய இது எட்டு எபிசோட்களில் படமாக்கப்பட்டு அடுத்தடுத்து விறுவிறுப்பான அதிரடிக் காட்சிகளால் நிறைந்தது. செல்வந்தர்களுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்பிற்கு ஒரு பாடம் கற்பிக்க நினைக்கும் சமூகத்தில் பின்தங்கிய நிலையிலிருக்கும் ஒரு புத்திசாலித்தனமான தெருக் கலைஞனை சுற்றி இதன் கதை பின்னப்பட்டுள்ளது . அவருக்கும் சட்டத்தை அமலாக்கும் அதிகாரிகளுக்கும் இடையேயான ஒரு விறுவிறுப்பான தொடர்ந்த முடிவற்ற இந்தப் போட்டியில் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. சீதா ஆர் மேனன் மற்றும் சுமன் குமார் இருவரும் ராஜ் & டிகே யுடன் இணைந்து , ஃபார்ஸி ஐ எழுதியுள்ளனர்.
ஃபார்ஸி தொடர் நடுத்தர மக்களின் கனவுகள், அபிலாஷைகள் மற்றும் மனக்கலக்கம் நிறைந்த அவர்களின் வாழ்க்கைச்சூழலில் வேரூன்றிய உணர்வுகளோடு விலா எலும்புகளை நோகவைக்குமளவுக்கு சிரித்து மகிழவைக்கும் என்கிறார்கள்
இரட்டையர்களான ராஜ் & டிகே மேலும் அவர்கள் கூறுகையில், “தி ஃபேமிலி மேனின் மிகப்பெரிய வெற்றிகரமான கூட்டணிக்குப் பிறகு, எங்களின் அடுத்த புதிய தொடருக்காக பிரைம் வீடியோவுடன் மீண்டும் இணைவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்! இது எங்களுக்கு மிகவும் பிடித்த மனதுக்கு நெருக்கமான கதைகளில் ஒன்றாகும், இதை நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் உருவாக்கிவந்த போது பெருந்தொற்றுநோய் காலத்தில் ஏற்பட்ட ஏற்ற தாழ்வுகளினூடே பயனித்துப் படமாக்கியுள்ளோம். அடிப்படையில் இந்த தொடரின் உருவாக்கம் அதிகளவில் வியர்வையையும் கண்ணீரையும் சிந்த வைத்திருக்கிறது. தி ஃபேமிலி மேனுக்குப் பிறகு, மற்றொரு அற்புதமான, தனித்துவமான உலகத்தைக் கொண்டு வர எங்களுக்கு நாங்களே சவால் விட்டுக்கொண்டோம். பிரைம் வீடியோவில் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்தத் தொடரை பார்ப்பதற்காக நாங்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறோம்.” என்றனர்.